ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு தரும் முதல் பரிசு - முத்தம்.
இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் பாடியவர்: திருச்சி லோகநாதன் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? கருகத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ? நெஞ்சில் உரமுமின்றி சீர்காழி கோவிந்தராஜன் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவா...
Comments
Post a Comment