Movie: Kaattu Roja - திரைப்படம்: காட்டு ரோஜா Singers: P.B. Srinivas, - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963 எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்! கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்! கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்! வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்! எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் கன்னியூர் மறந்...