Skip to main content

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? - திரைப்படம்: புதிய பறவை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ
இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ
உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

Comments

Popular posts from this blog

maranathai enni kalangidum vijaya - மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

Movie - karnan திரைப்படம்: கர்ணன் Singers: Seerkazhi Govindarajan பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த். மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ.. என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க! பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்...

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு திரைப்படம்: அன்னையின் ஆணை பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே ஏ..ஆ... துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே - நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் ஆஆஆஆ.. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் பாடியவர்: திருச்சி லோகநாதன் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? கருகத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ? நெஞ்சில் உரமுமின்றி  சீர்காழி கோவிந்தராஜன் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவா...