நான் அழும்போதெல்லாம் அரவணைக்கும் இன்னொரு ஜீவன். நான் சொல்வதை சரிஎன்பால் ஒருத்தி. நான் சொல்வதுதான் சரிஎன்பால் ஒருத்தி. நான் தவறு செய்தால் அடிப்பேன் என்பாள் ஒருத்தி. அடிக்காதே பாவம என்பாள் ஒருத்தி. நான் கேட்க்கும்போதேல்லாம் எதெற்கு உனக்கு காசென்பால் ஒருத்தி. நான் கேட்காமல் கொடுப்பாள் ஒருத்தி. நான் உண்பதற்கு அதிகம் தின்பண்டங்கள் கொடுத்தவள்., என்னை அதிக நேரம் தூக்கிச்சுமந்தவள், எல்லோரிடமும் என்னைக்காட்டி பெருமிதம் கொண்டவள், என்னைக் காண பொடிநடையாய் ஓடி வருபவள், அசை போட பல உண்டு. என் அன்னையை விடவும் அதிக முத்தம் கொடுத்தவள். அவள் தான் என் பாட்டி. அன்னையை விடவும் பாட்டிக்கு பாசம் அதிகமோ? அவளுக்கு நான் தந்த மிக உயர்ந்த பரிசு, அவளை நான் கொள்ளுப்பாட்டியாக்கி அழகு பார்த்தது தான். என்ன ஆனந்தம் அவளுக்கு! அவளின் மரணச்செய்தி என்னை பாதிக்க வில்லை. ஆனால் அவள் உயிரின்றிக்கிடந்தது என்னை மிகவும் பாதித்தது. என் தொண்டை எச்சில் விழுங்க மறுத்தது என் கண்ணில் நீர் பெருகி குளமாகியது. என் சிறுவயதில் அவளோடு இருந்த ஞாபகங்கள்... வருசையின்றி ஒன்றுக்கு முன் ஒன்று, ஒன்று முடிவதற்குள்...