உழவனை நினைந்து சில வரிகள்: (விழாவில் என் சக ஊழியர்களுடன் பகிந்து கொண்டது) விதைத்தெல்லாம் விருந்தாகும் அறுவடைத்திருநாள். வருடமெல்லாம் காத்திருந்த தைத்திங்கள் முதல் நாள். தித்திக்கும் பெயர் கொண்ட தனித்திருபெருநாள். புத்தாண்டு என்ற புதுநாமம் சூடிக்கொண்ட பொங்கல் நன்நாள். வந்தது! வந்தது! உழவனை நினைவூட்டி நின்றது. மண்ணோடு விளையாடும் மறவனாம் உழவன், புவியோரின் பசிப்பிணி போக்கும் தலைவன். எருதுவும் மண்புழுவும் தோழர்களாய் துணைநிற்க, கலப்பைதனை கையில் கொண்ட கண்கண்ட கடவுளவன். நன்றி சொல்லவேண்டுமோ அவனுக்கு இந்நாளிலே... என்ற ஐயம் எழ ... வேண்டாம் என்றே தோன்றியது எனக்கு. மண்ணில் நெல் விதைப்பவர்கள் மட்டுமல்ல உழவர்கள். மனதில் அறிவை விதைக்கும் நாமும் தான். இந்நாள் மட்டும் உழவன் என்று சொல்லிக்கொள்ள உளமார விழைகிறேன். நீங்கள்? பகலவனுக்கு என் படையல்: கதிரவன் முளைத்தான் ஒளி பிறந்தது. கதி அவன் என்றோம் கதிர் விளைந்தது. இம்மன்னில் பிறந்தோம்! பண்பை மறவோம்! இந்நாளிலே... நன்றி நவில்வோம் பகலவனுக்கு. விழாஎடுப்போம் உழவனுக்கு. உழவனின் பார்வையில்... சிந்திய வியர்வைத்துளிகள் நெல் மணிகளாய் கண்முன்னே! அறுவடை செய்து தந்தை பொரு...
நான் நானாக வாழவிரும்பிய போதெல்லாம் நீ வந்து வழிமரித்தாய். நீ மட்டும் போதுமென உன்வழியில் நான் நடக்க என் பின்னே ஏன் ஒளிந்தாய். இடுவதும் எடுப்பதுமாய் உன்னோடு பகிந்துகொள்ள எனக்காக மட்டும் இயங்கும் வங்கி நீ. அனைத்தும் நீ அறிந்திருக்க, ஏனடி சரிதானோ எனும் உன் குரல் தந்திடும் அமைச்சனின் அகம்பாவம். ...
அவளின் விரலை பிடிப்பதற்காக உழன்று, தேய்ந்து, இளைத்து, சுருங்கிடினும் நினைத்ததை சாதித்தேன் என்பதில் பெருமிதம். ஆனால் வளையல் என்ற என்னுடைய பெயர், மோதிரம் என்று மாற்றப்பட்டதில் தான் சிறிய வருத்தம்.
உனக்காக ஏங்கித்தான் நான் தினமும் கண்விழிப்பேன்.உன்னை நினைக்கையில் என் சோர்வுகள் சுவடின்றி மறைந்திடும்.உனக்காக சட்டைப்பையில் பணம் தேடுகையில் மட்டும், சேமிப்பும் சிக்கனமும் மறந்தே போகும். ஒரு குவளை நிறைய உன்னை வைத்துக்கொண்டு காதலியின் வார்த்தைகளை மணிக்கணக்கில் சுவைக்கும் ஆடவர் எத்தனை எத்தனை... ஏ குளம்பியே! நீ நல்லவனா? கெட்டவனா?
அவளின் கண்ணீர் என் தோளை குழைத்தன. அழுத விழிகள் உயிரைப்பிடுங்கின. கண்ணிரைக்கண்டு நீண்ட விரல்கள் நடுங்கித்தவித்தன. யானோ இதன்காரணம் என்று ஏங்கி என் மனம் நொறுங்கிக்கிடந்தது.