உழவனை நினைந்து சில வரிகள்:
(விழாவில் என் சக ஊழியர்களுடன் பகிந்து கொண்டது)
விதைத்தெல்லாம் விருந்தாகும் அறுவடைத்திருநாள்.
வருடமெல்லாம் காத்திருந்த தைத்திங்கள் முதல் நாள்.
தித்திக்கும் பெயர் கொண்ட தனித்திருபெருநாள்.
புத்தாண்டு என்ற புதுநாமம் சூடிக்கொண்ட பொங்கல் நன்நாள்.
வந்தது! வந்தது!
உழவனை நினைவூட்டி நின்றது.
மண்ணோடு விளையாடும் மறவனாம் உழவன்,
புவியோரின் பசிப்பிணி போக்கும் தலைவன்.
எருதுவும் மண்புழுவும் தோழர்களாய் துணைநிற்க,
கலப்பைதனை கையில் கொண்ட கண்கண்ட கடவுளவன்.
நன்றி சொல்லவேண்டுமோ அவனுக்கு இந்நாளிலே...
என்ற ஐயம் எழ ...
வேண்டாம் என்றே தோன்றியது எனக்கு.
மண்ணில் நெல் விதைப்பவர்கள் மட்டுமல்ல உழவர்கள்.
மனதில் அறிவை விதைக்கும் நாமும் தான்.
இந்நாள் மட்டும் உழவன் என்று சொல்லிக்கொள்ள உளமார விழைகிறேன்.
நீங்கள்?
பகலவனுக்கு என் படையல்:
கதிரவன் முளைத்தான்
ஒளி பிறந்தது.
கதி அவன் என்றோம்
கதிர் விளைந்தது.
இம்மன்னில் பிறந்தோம்!
பண்பை மறவோம்!
இந்நாளிலே...
நன்றி நவில்வோம் பகலவனுக்கு.
விழாஎடுப்போம் உழவனுக்கு.
உழவனின் பார்வையில்...
சிந்திய வியர்வைத்துளிகள் நெல் மணிகளாய் கண்முன்னே!
அறுவடை செய்து தந்தை பொருளீட்ட...
தைவந்தால் திருமணம் என வளர்ந்த கன்னி மகள் கண் முன்னே!
உழைத்த ஊனெல்லாம் பூரித்து மகிழ்வுர
கண்ட கனவை மெய்பித்து தந்த கதிரவனுக்கு
கரும்பு பொங்கல் மஞ்சள் குருத்து படைத்து
நன்றி சொல்லிட தைப்பொங்கல் வந்தாச்சு.
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html
நன்றி