Skip to main content

Posts

கண்கள் நீயே காற்றும் நீயே

கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊணும் நீ உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் எனும் தீர்த்ததால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே கண்கள் நீயே .... இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னைத் தாங்க ஏங்கினேன் அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தோளில் ஆடும் தேனே தொட்டில் தான் பாதி வேளை சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ இசையாக பல பல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என் மகன் எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள் என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே என்னை விட்டு இரண்டு எட்டு thallip போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன் போகும் பாதை நீளம் கூரையாய் நீல வானம் பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ நான் கொள்ளும் கர்
Recent posts

தமிழே

கள்ளியடி நீ! ஊருக்கொரு வேஷம் தரிப்பாய். கன்னியடி நீ! உன்னை வாசிக்கதெரியாதவனும் நேசிப்பான். தமிழே... உன்னைத்தீண்டுபவன் கவியாகாது போவதும் சாத்தியமோ?

Endha oor endravanE - பாடல்: எந்த ஊர் என்றவனே

Movie: Kaattu Roja - திரைப்படம்: காட்டு ரோஜா Singers: P.B. Srinivas, - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963   எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!  எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்! கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்! கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்! வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்! எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் கன்னியூர் மறந்தவுடன் கட

madi meethu thalai vaiththu - பாடல்: மடி மீது தலை வைத்து

Movie: Annai illam - திரைப்படம்: அன்னை இல்லம் Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963   மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே ஆஹா ஓஹோ ம்ம் மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் வாயின் சிவப்பு

சின்னஞ்சிரிய வண்ணப்பறவை - திரைப்படம்: குங்குமம்

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி ராகம்: தர்பாரி கானடா சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையோடு தன்னை மறந்து சொனனதைச் சொல்லுதம்மா உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை  ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை  உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை  ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த  மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும்  ஆசை கொணட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்  கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி அந்தக்  கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி

நீயும் பொம்மை நானும் பொம்மை - திரைப்படம்: பொம்மை

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் இசை: வீணை பாலச்சந்தர் நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை - அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை (நீயும்) வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லதவன் பொமமை அல்லும் பகலும் உழைப்பவன் பொமமை - தினம் அல்லல்படடு அலைபவன் பொம்மை (நயும்) விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை வீசும் புயலில் உலகமே பொம்மை சதியின் முன்னே தர்மமும் பொம்மை - வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை இன்பச் சோலையில் இயற்கை பொமமை - அந்த இயற்கை அமைப்பில் எதுவும் பொம்மை

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

பாடியவர்: வாணி ஜெயராம் ஆ......... ஆ........... ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ..... காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு) எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ......... எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ......... ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்ல