Skip to main content

Posts

Showing posts with the label சகியின் கவிதைகள்

வடு

முதல் நாள் சமையலில் சுட்ட வடு கண்ணில் சிக்கியபோதெல்லாம் கதை சொல்லும்.

அனுபவம்

தனக்கு நேரிட்டவைகளைமட்டுமே மானுடன் பதிவுசெய்வதெனில் மரணம் என்ற சொல் ஏட்டின் வாசம் அறிந்திருக்காது.

ஜன்னலோரம்

உடுக்க நல்ல கச்சையின்றி தவிக்கும் பிச்சைக்காரர்களைக் காணவோ நான் இச்சையுடன் அமர்ந்தேன் ஜான்னலோரத்திலே!

காட்சிப்பொருள்

பெண்பார்க்க செல்பவரா நீங்கள்? அவளின் கண்களைப்பாருங்கள். அவள் காட்சிப்பொருளானதற்கு சாட்சிசொல்லும்.

மனதிற்கு இதமான பேருந்துப்பயணம்

நகர்கிறேன், பேருந்துடன் நானும். என் நிகழ்கால வலியில் இருந்து வெகு தூரம் பயணிக்கிறேன். அதுவரை என்னை பிய்த்துதெடுத்த எடுத்த மன இருக்கங்கள், ஜன்னலோர மரங்களாய் பின்னோக்கி ஓடின. விழியன் வாசல் மெல்ல நனைந்திட, ஆறுதல் வந்தென்னை அன்புடன் அணைத்துக்கொண்டது.

வேண்டா விடுதலை

சகபயணிகளின் கூச்சலையும், சாலையின் புழுதியையும் தாண்டி... வானொலியின் அலைவரிசை என்னை சூழ்ந்திருக்க, வேண்டா விடுதலையாய் வந்துவிடும் நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்.

உதிரம்

மனத்தினின்று உதிரிந்த உதிரம்... என் எழுதுகோலின் இதழிலிருந்து கசிந்தது கவிதையாய்.

சோகம்

சோகத்தை நான் வெறுப்பதில்லை. அது (மட்டும்) தான் என் வாழ்வில் சிதறிக்கிடக்கும் சந்தோஷங்களை எனக்கு அடையாளம் காட்டுகிறது.

பண்பு

நீ எல்லாம் இழந்த பின்பும் உன் பண்பு உன்னைப்பற்றிக்கொண்டு இருக்கும்.

தாய் வீடு

பிறந்து வளர்ந்த வீட்டிற்கே விருந்தாளியாய் சென்றாள். உரிமையிழந்தவளாய்!

தவறுகள்

என் தவறுகளை நான் ரசிப்பதுண்டு. ரசித்த தவறுகள் நினைவை விட்டு அகல்வதில்லை அவை மீண்டும் நிகழ்வதுமில்லை.

வீடு

வங்கிக்கடன் வாங்காமல் நானும் கட்டினேன் கடலோரத்தில் மணல் வீடு.

வலிமை

அவளது பார்வையில் (வலிமை). ஆம்! (வலி)யுற்ற கண்கள் கலங்கிட நிலைதடுமாறும் (மை).