பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
கண்ணம்மா ஆ. ஆ.. ஆ...
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்கழும்
இதழ்களும் ஆ... ஆ.. ஆ..
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்
பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் ஆ......
பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த
வையத்த்துள் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே - இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
நீயெனதின்னுயிர்க் கண்ணமமா ஆ..
நீயெனதின்னுயிர்க் கண்ணம்மா - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்
நீயெனதின்னுயிர்க் கண்ணம்மா - துயர்
போயின துன்பங்கள் நின்னைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - துயர்
போயின துன்பங்கள் நின்னைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே
என்றன் வாயினிலே அமுதூறுதே
கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே
என்றன் வாயினிலே அமுதூறுதே
உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
ஆ...
Comments
Post a Comment