தரை மேல் பிறக்க வைத்தான் (படகோட்டி) குரல்: டி எம் சௌந்தரராஜன் வரிகள்: வாலி தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான் தரை மேல் பிறக்க வைத்தான் கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு (2) முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை இதுதான் எங்கள் வாழ்க்கை (தரை மேல்) கடல் நீர் நடுவே பயணம் போனால் குடினீர் தருபவர் யாரோ தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஒருனாள் போவார் ஒருனாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் (2) அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம் (தரை மேல்) |
இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் பாடியவர்: திருச்சி லோகநாதன் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? கருகத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ? நெஞ்சில் உரமுமின்றி சீர்காழி கோவிந்தராஜன் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவா...
மிகவும் பொருத்தமான பாடல் வரிகள் சரியான பிரதிபலிப்பு..
ReplyDeleteவாழ்க நின் புகழ்....
Ennakku indha song porul venum please help me
ReplyDeleteReply me please udane
ReplyDelete