Skip to main content

ஓடி விளையாடு பாப்பா

பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்


ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா


கூடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா


பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த
பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா


பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா
பொய் சொல்லக் கூடாது பாப்பா 
தெய்வம் நமக்குத் துணை பாப்பா 
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா


காலை எழுந்தவுடன் படிப்பு
அச்சம் தவிர் ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி ஈகைத் திறன்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகமும் புகழும்
தவமும் திறனும் தனமும் கனமும்


ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா


Comments

  1. Lucky Club: Bet £10, get £60 in free bets on
    Play the Best Sports in the UK, New Customer Offer & Bonuses at Lucky Club. 18+, T&C Apply. luckyclub Lucky Club is a licensed and regulated gambling site with an

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காசே தான் கடவுளப்பா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: சக்கரம் காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் பாடியவர்: திருச்சி லோகநாதன் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? கருகத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ? நெஞ்சில் உரமுமின்றி  சீர்காழி கோவிந்தராஜன் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவாரடி

vantha naal mudhal lyrics-paava mannippu tamil song lyrics

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி குரல்: டி எம் சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2) நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய் நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம் ஜாதியும் பேதமும் கூறுவார் - அது வேதன் விதியென்றோதுவார் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் (வந்த நாள்) பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2) பாயும் மீன்களில் படகினைக்கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2) மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் (வந்த நாள்) இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் ம் ஹ்ம் ம் ஹ்ம் (வந்த நாள்)