பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு திரைப்படம்: அன்னையின் ஆணை பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே ஏ..ஆ... துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே - நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் ஆஆஆஆ.. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
On reading this, quote
ReplyDeletei remember one sms
Pettha Ponnu vs Exam Papper - Similarity
2um katti kudikkura varaikkum thalavalithan
Pettha Paiyan Vs Exam Papper - Similarity
2um thiruthavae mudiyadu!
:-)