Skip to main content

வேறென்ன வேண்டும் எனக்கு?

வேண்டும் எனக்கு...
தலை சாய உன் மடி
தாலாட்ட உன் கரம்
கவிபாட உன் கண்கள்
கண்விழிக்க உன் முகம்
செவிகொடுக்க உன் மெட்டி ஒலி
கை பிடிக்க உன் விரல்
சிரிக்க உன் சிறு அழுகை
சிந்திக்க உன் சிறு கோபம்
சிலிர்க்க உன் பெரும் துணிச்சல்
குறைசொல்ல உன் குறும்பு
குழம்பிப்போக உன் மௌனம்
மௌனம் கொள்ள உன் முத்தம்
இளைப்பாற உன் அணைப்பு
உயிர் வாழ உன் நினைப்பு
வேறென்ன வேண்டும் எனக்கு

Comments

  1. போதுமா? ரொம்ப கம்மியா கேட்டு இருக்கற மாதிரி தெரியுது!

    ReplyDelete
  2. நால்லாத் தான் இருக்கு...

    ReplyDelete
  3. எல்லாத்தையும் கேட்டாச்சு. இனி வேறென்ன இருக்கு?

    ReplyDelete
  4. புன்னகை வேண்டாமா
    கொஞ்சி விளையாட கார் கூந்தல் வேண்டாமா
    காலரா நடை பழகி அன்பு வளர்க்க வேண்டாமா
    பல லட்சம் பல கோடி இன்னும் மிச்சம் இறுக்க
    இந்த சிறு பட்டியல் எந்த மூலைக்கு....

    ReplyDelete
  5. அருமையான வரிகள்

    உன் நட்பு வேண்டும் எமக்கு கிடைக்குமா

    ReplyDelete
  6. வேறென்ன வேண்டும் எனக்கு?? சூப்பரா இருக்குங்க..

    ReplyDelete
  7. nice

    தமிழ் மனம் , இன்ட்லியில் இணையுங்கள் (அருண் சொல்லலையா ?)

    ReplyDelete
  8. கருத்துக்களுக்கு நன்றி...

    @அருண் பிரசாத் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

    @ வெறும்பய(??), ஹரிஸ், காயத்ரி, ஆனந்தி : மிக்க நன்றி

    @நாகராஜசோழன் : கார்த்தியின் கருத்தை பாருங்கள்

    @தினேஷ்குமார் : உங்கள் நட்பிற்கு நன்றி.

    @ மங்குனி அமைச்சர் : நன்றி, தமிழ் மனத்தில் இணைத்து இருக்கிறேன்(ஆம் அருண் தான் அறிமுகப்படுத்தினார்) இன்ட்லியில் இனி இணைக்கிறேன்.

    @ சிவா : டீச்சரா ??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

maranathai enni kalangidum vijaya - மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

Movie - karnan திரைப்படம்: கர்ணன் Singers: Seerkazhi Govindarajan பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த். மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ.. என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க! பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்...

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு திரைப்படம்: அன்னையின் ஆணை பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே ஏ..ஆ... துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே - நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் ஆஆஆஆ.. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

காசே தான் கடவுளப்பா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: சக்கரம் காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால...