Skip to main content

Posts

Showing posts with the label தமிழ் பாடல் வரிகள்

தாய் தந்த பிச்சையிலே

பாடியவர்: பி. சுசீலா திரைப்படம்: சரஸ்வதி சபதம் தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா பெற்றவள் உடல் சலித்தால் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - அம்மா அம்மம்மா.. பெற்றவள் உடல் சலித்தால் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா - மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா பபத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா - அம்மா அம்மம்மா பபத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா - என்றும் இது தான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா? - என்றும் இது தான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா? தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

உள்ளத்தில் நல்ல உள்ளம் - திரைப்படம்: கர்ணன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர்ப்பழி ஏற்றாயடா - நானும் உன் பழி கொண்டேனடா - நானும் உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா - கர்ணா மன்னித்து அருள்வாயடா - கர்ணா மன்னித்து அருள்வாயடா செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா வஞ்சகன் கண்ணனடா - கர்ணா வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவ் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

கல்லிலே கலைவண்ணம் கண்டான் - திரைப்படம்: குமுதம்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் கல்லிலே கலைவண்ணம் கண்டான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் பல்லவர் கோன் கண்ட மல்லை போலப் பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை கல்லிலே கலைவண்ணம் கண்டான் பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான் பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான் கண்ணான இடம் தேடி வந்தோம் கண்ணான இடந்தேடி வந்தோம் - என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்துப் பார்ப்பாய் கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் பருவத்தில் இளமேனி பொங்க ஒரு பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க பருவத்தில் இளமேனி பொங்க ஒரு பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க அரங்கேறி நடமாடும் மங்கை அரங்கேறி நடமாடும் மங்கை போல அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய் கல்லிலே கலைவண்ணம் கண்டான் உடலாலும் மனதாலும் உன்னை என் உயிராக சேர்த்து நான் வாழ்கின்றேன் கண்ணே உடலாலும் மனதாலும் உன்னை எ

maranathai enni kalangidum vijaya - மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

Movie - karnan திரைப்படம்: கர்ணன் Singers: Seerkazhi Govindarajan பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த். மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ.. என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க! பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதா

ஓடம் நதியினிலே - திரைப்படம்: காத்திருந்த கண்கள்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே ஆசை எனும் மேடையிலே ஆடி வரும் வாழ்வினிலே ஆசை எனும் மேடையிலே ஆடி வரும் வாழ்விலே யார் மனதில் யார் இருப்பார் யாரரிவார் உலகிலே  ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டுவரும் வெளியினிலே கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டுவரும் வெளியிலே குரலை மட்டும் இழந்த பின்னே குயில் இருந்தும் பயனில்லே ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

எங்கிருந்தோ வந்தான் - திரைப்படம்: படிக்காத மேதை

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே   என்னதவன் செய்து விட்டேன் இங்கிவனை யான் பெறவே   என்னதவன் செய்து விட்டேன் - கண்ணன் எங்கிருந்தோ வந்தான் சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான் சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான் கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்  வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே  என்னதவன் செய்து விட்டேன் - கண்ணன் எங்கிருந்தோ வந்தான் பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்  பார்வையிலே சேவகனாய் - ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் இங்கிவனை யான் பெறவே  என்னதவன் செய்து விட்டேன் ரங்கன் எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்  எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ஆடியடங்கும் வாழ்க்கையடா - திரைப்படம்: நீர்க்குமிழி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம் ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்! ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

உலவும் தென்றல் காற்றினிலே

பாடியவர்: திருச்சி லோகநாதன் திரைப்படம்: மந்திரி குமாரி உலவும் தென்றல் காற்றினிலே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே? இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே? தெளிந்த நீரைப் போல தூய காதல் கொண்டோம் நாம் களங்கம் அதிலும் காணுவாய் களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ? குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ? உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம் உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்

வெள்ளிப் பனி மலையின்

பாடியவர்: திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள் பாரத தேசமென்று

அடிக்கிற கைதான் அணைக்கும்

பாடியவர்: திருச்சி லோகநாதன் அடிக்கிற கைதான் அணைக்கும்  அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும்  கசக்கிற வாழ்வே இனிக்கும் புயலுக்குப் பின்னே அமைதி - வரும்  துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி புயலுக்குப் பின்னே அமைதி - வரும்  துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி புயலுக்குப் பின்னே அமைதி - வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி இருளுக்குப் பின் வரும் ஜோதி இதுதான் இயற்கை நியதி இருளுக்குப் பின் வரும் ஜோதி இதுதான் இயற்கை நியதி இதுதான் இயற்கை நியதி அடிக்கிற கைதான் அணைக்கும் - பலே அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும் அடிக்கிற கைதான் அணைக்கும் இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி இடிக்கிற வானம் கொடுக்கும் இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி இடிக்கிற வானம் கொடுக்கும் இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி இடிக்கிற வானம் கொடுக்கும் விதைக்கிற விதை தான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி - ஹுக் விதைக்கிற விதை தான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி இதுதான் இயற்கை நியதி அடிக்கிற கைதான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும் அ

ஆசையே அலைபோலே

பாடியவர்: திருச்சி லோகநாதன் ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார் நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன் வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா? மணம் பெறுமா? முதுமையே சுகமா? காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே சூரைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ? வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆ..ஆ..

வளர்ந்த கலை மறந்து விட்டாள் - திரைப்படம்: காத்திருந்த கண்கள்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா? குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா? வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா? - தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா? காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்த காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா? மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா? - அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா? தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா? - அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா? - அதை நீ பிறந்த பின்ப

மௌனமே பார்வையால்

திரைப்படம்: கொடிமலர் பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் தேன் ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும் அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் தேன் ஆறு போலப் பொங்கி வரவேண்டும்  அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்.. மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும் முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்.. மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அவள் பறந்து போனாளே

திரைப்படம்: பார் மகளே பார் பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ், T.M. சௌந்தரராஜன் அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவியில்லை என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவியில்லை என் நெஞ்சுக்கு நினைவில்லை என் நினைவுக்கும் உறக்கமில்லை என் நினைவுக்கும் உறக்கமில்லை அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே இந்த வீட்டுக்கு விளக்கில்லை சொந்தக் கூட்டுக்குக் குயிலில்லை இந்த வீட்டுக்கு விளக்கில்லை சொந்தக் கூட்டுக்குக் குயிலில்லை என் அன்புக்கு மகளில்லை ஒரு ஆறுதல் மொழியில்லை அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே என் இதயத்தில் பூட்டி வைத்தேன் அதில் எனையே காவல் வைத்தேன் அவள் கதவை உடைத்தாளே தன் சிறகை விரித்தாளே  தன் சிறகை விரித்தாளே அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே அவள் எ

ஏதோ மனிதன் பிறந்து விட்டான்

திரைப்படம்: பனித்திரை பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ் ஆஹஹஹாஹஹ ஹஹா ஓஹொஹொ ஹோஹொஹொ ஹோஹோ லாலல்ல லாலல்ல லாலா ஆஹஹா ஓஹோஹோ ம்ம்ம். ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன் இயற்கை அறிவை மடமையெனும் பனித் திரையாலே மூடுகிறான் ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் - பெண் பேதைகள் என்றும் பீடைகள் என்றும் மறு நாள் அவனே ஏசுகிறான் ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும் நரியாய் அவனே உருவெடுத்தாலும் தந்திரமாவது தெரிந்திருக்கும் காக்கைக் குலமாய் அவதரித்தாலும் ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும் காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் கடுகளவாவது பயனிருக்கும் ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த ஆறாம் அறிவைத

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம் பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைமுடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால

நீ போகும் இடமெல்லாம் - திரைப்படம்: இதயக் கமலம்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா இயற்றியவர்: கண்ணதாசன் போ போ போ.. வா வா வா... நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ போபோபோ நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான் இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் - நீ பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான் இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம் இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம் உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம் இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம் வா வா வா போ போ போ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப் பாடலாம் மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் எனையே காணலாம் காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப் பாடலாம் மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் எனையே காணலாம் போ போ போ பொங்கும் மஞ்சள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: ஆலயமணி சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

உள்ளம் என்பது ஆமை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: பார்த்தால் பசிதீரும் உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை தெய்வம் என்றால் அது தெய்வம் - அது சிலை என்றால் வெறும் சிலை தான் தெய்வம் என்றால் அது தெய்வம் - அது சிலை என்றால் வெறும் சிலை தான் உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை இல்லை என்றால் அது இல்லை உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை தண்னீர் தணல் போல் எரியும் - செந் தணலும் நீர் போல் குளிரும் தண்னீர் தணல் போல் எரியும் - செந் தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல் தெரியும் - அது நாட்பட நாட்படப் புரியும் நாட்பட நாட்படப் புரியும் உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

உள்ளத்தின் கதவுகள் கண்களடா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: இரவும் பகலும் ம்ம்..ஹ்ம்.. உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா காதல் என்பது தேன்கூடு - அதை கட்டுவதென்றால் பெரும்பாடு காதல் என்பது தேன்கூடு - அதை கட்டுவதென்றால் பெரும்பாடு காலம் நினைத்தால் கைகூடும் - அது கனவாய்ப் போனால் மனம் வாடும் உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா உயிருக்கு உருவம் கிடையாது - அந்த உயிரின்றி எதுவும் நடவாது உயிருக்கு உருவம் கிடையாது - அந்த உயிரின்றி எதுவும் நடவாது உருவத்தில் உண்மை தெரியாது - என்றும் உலகத்தில் நேர்மை அழியாது உள்ளத்தின் கதவுகள் கண்களட