Skip to main content

Posts

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? - திரைப்படம்: புதிய பறவை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ இறைவன் கொடியவனே எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ உறங்குவேன் தாயே எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அ

கா கா கா - திரைப்படம்: பராசக்தி

பாடியவர்: சி.எஸ். ஜெயராமன் இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி இசை: ஜி. ராமநாதன் கா கா கா கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க - அந்த அனுபவப் பொருள் விளங்க - காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க - காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க - வாங்க கா கா கா சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க - உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க - உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே  தாரணி மீதிலே பாடுங்க - பாடும் கா கா கா எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் திரைப்படம்: பாலே பாண்டியா ஆ. ஆ.. ஆ.. நீயே உனக்கு என்றும் நிகரானவன்   நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ... வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை கருணை கருணை கருணை கருணை வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை வ்டிவாகி முடிவற்ற முதலான இறைவா நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ... துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும் தூபத்தின் உன் இதயம் மயங்காதையா துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும் தூபத்தின் உன் இதயம் மயங்காதையா விதி கூட உன் வடிவை நெருங்காதையா விதி கூட உன் வடிவை நெருங்காதையா வினை வென்ற மனம் கொண்ட இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர் நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...

வாராயோ வெண்ணிலாவே

பாடியவர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ் திரைப்படம்: மிஸ்ஸியம்மா வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதிபதி விரோத மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் வாராயோ வெண்ணிலாவே தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது வாராயோ வெண்ணிலாவே அனுதினம் செய்வார்மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார்மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

பாடியவர்: பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் இயற்றியவர்: கண்ணதாசன் இசை: கே.வி. மகாதேவன் திரைப்படம்: திருவிளையாடல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப் பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் - வண்ண தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல் தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே தான் பறந்து ஆட்சி செய்து தளிர்மணித் தென்றல் - அது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல் வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல் பொதிக

கண்ணா கருமை நிறக் கண்ணா

பாடியவர்: பி. சுசீலா இயற்றியவர்: கண்ணதாசன் இசை: கே.வி. மகாதேவன் திரைப்படம்: நானும் ஒரு பெண் கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா  இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா - நல்ல இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா கண் பார்க்க முடியாமல்

கண்ணன் ஒரு கைக்குழந்தை

பாடியவர்: ஜேசுதாஸ் பி. சுசீலா இசை: இளையராஜா திரைப்படம்: பத்ரகாளி கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்க கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்துப் பாடுகிறேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ? உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ? ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா வாழ்விருககும் நாள் வரைக்கும் தஞ்சம் உன்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளை இது உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிககும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்துப் பாடுகிறேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ ஆராரிர