kodi asainthathum kaattru lyrics-parthaal pasi theerum tamil song lyrics/ கொடி அசைந்ததும் காற்று வந்ததா
Movie Name:Parthal pasi theerum
Song Name:Kodi asainthathum
Singers:T.M.Soundar Rajan,P.Susheela
Music Director;M.S.Viswanathan
Lyrics:Kannadhasan
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)
இந்த பாட்டை கேட்டவுடனே சரோஜா தேவியோட முகம் தான் எனக்கு ஞாபகம் வருது .சோ ஸ்வீட் ....
ReplyDelete